அவல நிலையில் சட்டக்கல்வி!
நாட்டில் சட்டக் கல்வியின் தரம் வெகுவாக குறைந்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், சட்டக் கல்வியின் தரத்தை மேம்படுத்த அடிப்படை மட்டத்தில் இருந்தே முன்னேற்றம் தேவை என்றும் வலியுறுத்தியுள்ளது. ஒரு பெண் தனது வேலையை ராஜினாமா செய்யாமலேயே, வழக்கறிஞராக சேர அனுமதித்த குஜராத் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, இந்திய பார் கவுன்சில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் விசாரித்தது.
அப்போது, ’சமூகவிரோதிகள் கூட சட்டத்துறையில் பட்டம் பெறும் நிலை நிலவுகிறது. குறிப்பாக, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் சட்டப்படிப்புகள் வழங்கப்படும் சூழல் மிகவும் வருந்தத்தக்கது. சட்டப் படிப்புகள் மீதான தரத்தை முழுவதுமாக நீர்த்துப்போகச் செய்யும் வகையில் வகுப்புகளுக்கு செல்லாமல் ஒரு நபர் சட்டப் பட்டம் பெற முடிகிறது. சட்டப் பள்ளிகளில் மிகவும் கடுமையான சோதனைகள் மற்றும் மாணவர் சேர்க்கையில் தீவிரமான அளவுகோல்கள் நிர்ணயிக்கப்பட வேண்டியது அவசியம்’, என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment