போராட்ட ஆசிரியர்களுக்கு முன்னுரிமை - பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல் - Daily Dhuniya

Breaking

Wednesday, January 12, 2022

போராட்ட ஆசிரியர்களுக்கு முன்னுரிமை - பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தில் மாறுதல் பெற்று சென்ற ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங்கில் முன்னுரிமை வழங்க வேண்டும்,'' என தமிழ்நாடு உயர், மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொது செயலாளர் எஸ்.சேதுசெல்வம் தெரிவித்தார். அவர் கூறியதாவது, புதிதாக தோன்றிய 11 மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டிரான்ஸ்பர் வழங்கும் முன் அதே மாவட்டத்தில் தொடர்கிறார்களா, மாற்றம் பெற விரும்புகிறார்களாக என கேட்டு சலுகை வழங்க வேண்டும்.

2019 ல் நடந்த ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்று மாறுதல் பெற்று சென்றுள்ள ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங்கில் முன்னுரிமை தர வேண்டும்.ஒவ்வொரு பள்ளியிலும் உபரி ஆசிரியர்களை கணக்கிடும் போது கட்டாயம் 7 பட்டதாரி ஆசிரியர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மலைப்பகுதி பள்ளிகளில் வசிக்கும் ஆசிரியர்களுக்கு மற்ற மாவட்டங்களில் பணிபுரிய வாய்ப்பு தர வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க பொருளியல், தெலுங்கு, கன்னடம் பாடங்கள் விடுபட்டுள்ளன. அந்தபாடங்களிலும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment