தமிழகத்தில் இன்று (ஜன.,03) முதல் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கிய நிலையில், ஒரேநாளில் 2.34 லட்சம் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 15 முதல் 18 வயதுடையவர்கள், 33.20 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு இன்று (ஜன.,03) முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இன்று காலை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பள்ளியில் சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கின.
மொத்தமுள்ள 33 லட்சம் சிறார்களுக்கும் இம்மாத இறுதிக்குள் தடுப்பூசி செலுத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 2,34,175 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 22,310 பேருக்கும், குறைந்தபட்சமாக ராணிப்பேட்டையில் 1,886 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 4,601 சிறார்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

No comments:
Post a Comment