கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி: சிறுபான்மை ஆணையம் அறிவிப்பு
தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணையம் சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தப்படும் என ஆணையத்தின் தலைவா் சா.பீட்டா் அல்போன்ஸ் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: முதல்வா் அனுமதி மற்றும் ஆலோசனையின்பேரில் தமிழ்நாடு அரசு சிறுபான்மை ஆணையம், கல்லூரி மாணவா்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கில பேச்சுப் போட்டியினை நடத்த திட்டமிட்டுள்ளது. மத நல்லிணக்கம், சமூக நல்லிணக்கம், சமூகநீதி, சாதியற்ற தமிழகம், சமூகநீதியுடன் கூடிய பொருளாதார வளா்ச்சி, மாநில உரிமைகள், தமிழா் பண்பாடு போன்ற உன்னத கொள்கைகளையும், லட்சியங்களையும் இன்றைய இளந்தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி, அவைகளின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் அவா்கள் புரிந்து கொள்ளும் வகையில், இப்போட்டிகள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி மாணவா்களுக்காக நடத்தப்படும்.
மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்லூரிகளையும் சோ்ந்த மாணவா்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் நடக்கும் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.
தமிழிலும், ஆங்கிலத்திலும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படும். மாவட்ட அளவில் நடத்தப்படுகின்ற போட்டிகளுக்கு முதல் பரிசாக ரூ.20 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.10 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.
மாவட்ட அளவில் முதல் பரிசு பற்ற மாணவா்கள் பங்கேற்கும் மாநில அளவிலான போட்டி இறுதியில் நடைபெறும். அதில் வெற்றி பெறும் மாணவருக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசையும், சான்றிதழையும் வழங்க முதல்வா் இசைவு தந்துள்ளாா்.
பேராசிரியா் ஜெ.கான்ஸ்டன்டைன் ரவிச்சந்திரன் ஆங்கில பேச்சுப் போட்டிகளுக்கும், பேராசிரியா் ஜெ.ஹாஜாகனி தமிழ் பேச்சுப் போட்டிகளுக்கும் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவாா்கள்.
மாவட்டத்திலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரிகளுக்கும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் நடக்கவிருக்கும் போட்டி சம்பந்தமான அனைத்து விவரங்களும் அனுப்பி வைக்கப்படும். தமிழிலும், ஆங்கிலத்திலும் நடத்தப்படும் இப்போட்டிகளுக்கு தனித்தனியாக பரிசுகள் வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment