நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இனிமேல் ஆன்லைன் தேர்வுகள் கிடையாது என நேற்று வெளியான தகவலால் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருந்தது. இதனால் பாட வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடத்தப்பட்டது. மேலும் செமெஸ்டர் தேர்வுகள் உடபட அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நாடு முழுவதும் தற்போது கொரோனாவின் தொற்று பாதிப்பு குறைந்து நிலையில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்க திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வரப்படுகிறது. இருப்பினும் விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் நேரடியாக வகுப்பில் கலந்து கொள்ளலாம், இதனை தவிர்த்து ஆன்லைன் வகுப்புகளும் தொடர்ந்து நடைபெறும் என ஒன்றிய, மாநில அரசுகள் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இருப்பினும் யுஜியின் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டு வந்தது.
இதில் குறிப்பாக முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் இறுதியாண்டு தேர்வு கட்டாயம் நடத்தப்படும். அது நேரடியாகவும் இருக்கலாம் என யுஜிசி தரப்பில் தெரிவித்து அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே வெளியிட்டிருந்தது. ஆனால் இதனை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களை சார்ந்த 31 மாணவர்கள் தொடர்ந்த வழ க்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கல்லூரி மற்றும் பல்கலைக்கழங்களில் செமஸ்டர் தேர்வுகளை நடத்தாமல் இருப்பது என்பது மாணவர்களின் திறன்கள் அனைத்தையும் நீர்த்துப்போக செய்யும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென ஒரு தகவல் வெளியாகியது. அதில், ‘கொரோனா நோய் தொற்றை அடிப்படையாகக் கொண்டு முன்னதாக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களில் அனைத்திலும் தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இதில் தற்போது வைரஸ் தாக்கம் குறைந்துள்ளது. அதனால் இனி ஆன்லைன் முறையில் நடத்தப்படாது. அது ரத்து செய்யப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக யுஜிசியின் பல்கலைக்கழக மானியக் குழு செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் இனி ஆன்லைன் முறையில் கண்டிப்பாக நடத்தப்படாது. அது ரத்து செய்யப்படுகிறது என்ற தகவல் பொய்யானது’ என குறிப்பிட்டுள்ளார். இதில் எது எப்படியோ ஆன்லைன் தேர்வுகள் ரத்து என்ற தகவல் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

It's a fake news
ReplyDelete