விசாரணைக்கு பின்பே நடவடிக்கை - ஆசிரியர்கள் கோரிக்கை - Daily Dhuniya

Breaking

Saturday, December 11, 2021

விசாரணைக்கு பின்பே நடவடிக்கை - ஆசிரியர்கள் கோரிக்கை

பெரம்பலுார்:ஆசிரியர்கள் மீது புகார் எழும்பட்சத்தில், அதீத கவனமு டன் விசாரணை மேற்கொண்டு நடவ டிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரி யர் கழகம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து சங்கத்தின் மாநில தலைவர் மகேந்திரன் கூறியிருப்பதாவது: கற்றல், கற்பித்தல் பணியானது, ஆசிரியர் மாணவர் உறவு சார்ந்த கூட் டணியாகும். ஆனால், அண்மைக்கால மாக பள்ளி வளாகத்தில் ஆசிரியர் மாணவனை அடித்தார், மாணவர்கள் ஆசிரியரை அடித்தனர் என்பன உள்பட பாலியல் சார்ந்த பல்வேறு புகார்கள் எழுகின்றன. இதுபோன்று ஊடகங்களில் வரும் செய்திகள் சமூகத்துக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்துகின்றன.ஆங் காங்கே நடைபெறும் நிகழ்வுகள் என்று எதையும் கடந்து விட இயலாது. மாண வர்களின் ஒழுக்கத்தை வளர்ப்பதில் பள்ளி வளாகம் முதன்மையான இடத் தில் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. எனவே, மாணவர்களுக்கு கண்டிப்புடன் கூடிய கட்டுப்பாடுகளை, ஒழுக்கத்தை வழங்குவதற்கு மாறாக, கண்டிப்பான கட்டுப்பாடுகளை மட்டுமே கொண்டு ஒழுக்கத்தை வளர்த்தெடுப்பது என்பது சாத்தியமாகாது. அதற்காக, மாணவர்களை கண்டி ப்பதும், தண்டிப்பதும் ஆசிரியர்களின் முழுநேர வேலை அல்ல என்பதை கருத்தில்கொள்ள வேண்டும். புகார் மனுவை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, எவ்வித விசாரணையுமின்றி கைது செய்வதை ஏற்க இயலாது. ஆசிரியர்கள் மீது கற்றல், கற்பித்தல், ஒழுங்கீன செயல்கள், நிர்வாகம் சார்ந்து எழும் புகார்கள் மீது முறை யாக உரிய விசாரணை மேற்கொண்டு, தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண் டும்.இவ்வாறு அவர் கூறியிருப்பதோடு இந்த அறிக்கையை முதல்வர் ஸ்டாலி னுக்கும் சங்கம் சார்பில் அனுப்பி வைத்துள்ளார்.

No comments:

Post a Comment