குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு.. தமிழக அரசு உத்தரவு..!! - Daily Dhuniya

Breaking

Wednesday, December 15, 2021

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு.. தமிழக அரசு உத்தரவு..!!

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு.. தமிழக அரசு உத்தரவு..!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க 1,088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இத்தோடு கரும்பு வழங்குவதற்காக 71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த பரிசு தொகுப்பில் முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம் உள்ளிட்ட 20 மளிகை பொருட்கள் இடம்பிடித்துள்ளது. இப்போது இந்த பொங்கல் தொகுப்புக்கு உரிய தொகையை அனைத்து மண்டலங்களுக்கும் விடுவிக்க வேண்டும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.62 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment