பள்ளி மாணவர்களுக்கு 10.01.2022 மற்றும் 11.01.2022 ஆகிய தேதிகளில் வினாடி-வினா போட்டி - - Daily Dhuniya

Breaking

Wednesday, December 22, 2021

பள்ளி மாணவர்களுக்கு 10.01.2022 மற்றும் 11.01.2022 ஆகிய தேதிகளில் வினாடி-வினா போட்டி -

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்குமாநில அளவிலான வினாடி- வினா போட்டி நடத் தப்படுகிறது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதி காரி சத்யபிரதா சாகு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

2022ல் நடைபெற உள்ள 12வது தேசிய வாக்காளர் தினம் தொடர்பான SVEEP (வாக்காளர்கள் தேர் தல் நடைமுறையில் பங்கேற்க முறையான அறிவூட்டல்) செயல்பா டுகளின் ஒரு பகுதியாக, வருங்கால வாக்காளர் களின் தேர்தல் பங்க ளிப்பை மேம்படுத்தும் வகையில், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை யிலான பள்ளி மாண வர்களுக்கு இந்திய தேர் தல்கள் மற்றும் பொது அறிவு குறித்து மாநில அளவிலான வினாடி- வினா போட்டி நடத் தப்படுகிறது. முதற்கட்ட போட்டி மாவட்டஅள வில் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் நடத்தப்படுகிறது. ஒவ் வொரு அணியிலும் 2 மாணவர்கள் வரை பங் கேற்கலாம்.

ஒவ்வொரு மாவட் டத்தில் இருந்தும் சிறந்த இரண்டு அணிகள் அந் தந்த மாவட்ட தேர் தல் அதிகாரிகளால் மண்டல அளவிலான போட்டிக்கு தேர்ந்தெ டுக்கப்படும். மொத்தம் 76 அணிகள் மண்டல அளவிலான போட் டியில் பங்கேற்கும். மண்டல அளவிலான அரையிறுதி மற்றும் இறுதி நிலை போட்டி கள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலு வலகத்தில் 10.1.2022 மற்றும் II.1.2022 ஆகிய தேதிகளில் காணொலி கருத்தரங்கு மூலம் நடத் தப்படும்.

இதில்வெற்றிபெறும் 3 சிறந்த அணிகளுக்கு மாநில அளவிலான தேசிய வாக்காளர் தின கொண்டாட்டத் தின்போது பரிசுகள் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

No comments:

Post a Comment