மார்ச் இறுதியில் பொதுத்தேர்வுகள் - அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி - Daily Dhuniya

Breaking

Wednesday, November 24, 2021

மார்ச் இறுதியில் பொதுத்தேர்வுகள் - அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி

மார்ச் இறுதியில் பொதுத்தேர்வுகள்

காஞ்சிபுரத்தில் அடல் டிங்கரிங் ஆய்வகம், இல்லம் தேடி கல்வித் திட்ட பயிற்சி வகுப்பு, அரசு பள்ளியில் கானொலி வகுப்பறைகளை, அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் தொடங்கப்பட்டன.

மாணவர்கள் தேர்வு குறித்து அச்சம் அடைய கூடாது என்பதை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன. ஜனவரி மாதத்தில் மாதிரித் தேர்வுகள் நடந்து வழக்கம்போல் பொது தேர்வு மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் நடை பெறும். 55 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டாலு, மாண வர்களுக்கு அதி முக்கியமாக எது தெரிய வேண்டுமோ அது கண்டிப்பாக இருக்கும் என்றார். பேட்டியின்போது கலெக்டர் ஆர்த்தி, எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் ௧.சுந்தர், வக்கீல் எழிலரசன் உள்பட பலர் இருந்தனர்.

No comments:

Post a Comment