தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியருக்கு அஞ்சலி கூட்டம்
காஞ்சிபுரத்தை அடுத்த தாங்கியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியர் ஹரிக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வாலாஜாபாத் வட்டார கிளையின் சார்பில் அஞ்சலிக் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இந்த அஞ்சலிக் கூட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் திருமலைவாசன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ரமேஷ் வரவேற்றார். பொருளாளர் தணிகைவேல் முன்னிலை வகித்தார். காஞ்சிபுரத்தை அடுத்த தாங்கியில் உள்ளாட்சி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஆசிரியர் ஹரி பணியில் இருந்தபோது அங்கு அரசியல் கட்சியினரால் ஏற்படுத்தப்பட்ட வாக்குவாதங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி அதே அறையில் விழுந்து இறந்து விட்டார். தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியர் ஹரி குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 50 லட்சம் வழங்கிட வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும். இந்த இறப்புக்கு காரணமான படுபாதகச் செயலை செய்தவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த அஞ்சலிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

No comments:
Post a Comment