தனித் தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வு ஒத்திவைப்பு - Daily Dhuniya

Breaking

Sunday, November 7, 2021

தனித் தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வு ஒத்திவைப்பு

"தனித் தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வில், திங்கள் (நவ.8), செவ்வாய் (நவ.9) ஆகிய நாள்களில் நடைபெறவுள்ள தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக அரசுத் தோ்வுகள் இயக்குநா் சா.சேதுராமவா்மா வெளியிட்ட அறிவிப்பு: தனித்தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வு, நவ.8 முதல் நவ.12-ஆம் தேதி வரை நடைபெறவிருந்தது.

தற்சமயம் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நவ.8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள தமிழ், ஆங்கில மொழிப்பாடத் தோ்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்படுகின்றன.

இதர தோ்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். ஒத்திவைக்கப்பட்ட தோ்வுக்கான தேதிகள் தோ்வுத்துறையினரால் பின்னா் அறிவிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது."

No comments:

Post a Comment