குழந்தைகளுக்கான உரிமைகள்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உரிமைகள்:
♦ 6-14 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய தொடக்கக் கல்வி
♦எந்தவொரு அபாயகரமான வேலையிலிருந்தும் குழந்தைகள் பாதுகாக்கப்படுவதற்கான உரிமை
♦ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி
♦துன்புறுத்தலில் இருந்து குழந்தைகள் பாதுகாக்கப்படுவதற்கான உரிமை
♦குழந்தைகளின் வயது அல்லது வலிமைக்கு பொருந்தாத தொழில்களில் ஈடுபடும் பொருளாதாரத் தேவையிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கான உரிமை
♦ஆரோக்கியமான முறையில் வளர்ச்சிக்கான சம வாய்ப்புகள், வசதிகள் வழங்கும் உரிமை
♦சுதந்திரம், கண்ணியத்திற்கான உரிமை மற்றும் சுரண்டலுக்கு எதிராக குழந்தைகளின் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்.
எதிர்கால சமுதாயத்தை சிறந்த முறையில் உருவாக்கும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. உணவு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல்வேறு காரணங்களால் பல குழந்தைகளுக்கு இன்றும் கிடைக்காத நிலை இருக்கிறது.
பொருளாதார சூழ்நிலையால் குழந்தைத் தொழிலாளர்களும், சட்டங்கள் இருந்தும் குழந்தைகளிடையே பாலியல் துன்புறுத்தலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.
குழந்தைகளின் வளர்ச்சிக்கு எதிரான அனைத்து காரணிகளும் களையப்பட்டு அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தர ஒவ்வொருவரும் முயற்சிக்க இந்நாளில் உறுதிமொழி எடுக்க வேண்டும்.

No comments:
Post a Comment