அரசு ஊழியர்கள் அகவிலைப்படியில் ரூ.8 ஆயிரம் கோடி கபளீகரம் - Daily Dhuniya

Breaking

Sunday, November 7, 2021

அரசு ஊழியர்கள் அகவிலைப்படியில் ரூ.8 ஆயிரம் கோடி கபளீகரம்

கடலா டியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டக் கிளை மாநாடு தனியார் மண்டபத்தில் நடந்தது. வட்டார தலைவர் சிவணு பூவன் தலைமை வகிக்க, மாவட்ட தலைவர் சண் முகநாத்துரை, துணை தலைவர் முருகேஸ்வரி முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் பால முருகன் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சேகர் பேசுகை யில், 'நியாமான கோரிக் கைகளுக்கு ஜன நாயக முறையில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர் கள் மீது கடந்த அதிமுக ஆட்சியில் பல அச்சுறுத்தல் கள் இருந்தது. இதனால்பல ரின் பதவி உயர்வு, சம்பள உயர்வு பாதிப்புக்குள்ளா கியுள்ளது. அதிமுக அரசு ஆட்சி முடியும் தருவாயில் கூட ரோனா தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் அரசு ஊழியர்கள், ஆசிரி யர்களின் அகவிலைப்படி யில் கை வைத்து ரூ.8 ஆயி ரம் கோடியை கபளீகரம் செய்து விட்டனர். எடப் பாடி பழனிச்சாமி உள்ளிட் டோர் அரசு ஊழியர்கள். ஆசிரியர்களின் சம்பளம் குறித்து தவறான தகவலை பரப்பி விட்டனர்' என்றார்.

தொடர்ந்து கூட்டத்தில் கருணை அடிப்படையில் வழங்கப்படும் அரசு பணி களை உடடினயாக வழங்க வேண்டும். அனைத்து துறையினருக்கும் கால தாமதமின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment