எவ்வித சந்தேகமும் வேண்டாம்; படிப்பதை விட்டு விடாதீர்கள்: அரையாண்டு தேர்வு நிச்சயம் நடக்கும்! - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி - Daily Dhuniya

Breaking

Saturday, October 9, 2021

எவ்வித சந்தேகமும் வேண்டாம்; படிப்பதை விட்டு விடாதீர்கள்: அரையாண்டு தேர்வு நிச்சயம் நடக்கும்! - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

உலகபெண்குழந்தைகள் தினத்தையொட்டி, திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மதியம்நடந்தது.பல் வேறு பள்ளிகளில் இருந்து மாணவிகள்கலந்து கொண் டனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு,பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிக ளுக்கு பரிசுகள் வழங்கி னார்.

முன்னதாக பள்ளி மாண விகள், கல்வி அமைச்சர்அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம் கேள்விகள் கேட்டு கலந்துரையாடல் நிகழ்ச்சிநடந்தது.அப்போது அமைச்சர் எளிதான கேள்விகளாக கேளுங்கள். பதில் சொல்கி றேன் என்றார். உங்களுக்கு பிடித்தஆசி ரியர் யார்?

அப்போது மாணவி ஒரு வர், 10ம் வகுப்பு மதிப் பெண் சான்றிதழில் 'ஆல் பாஸ்' என்று போடப்பட்டுள்ளது. இத னால், எங்களது உயர்கல்வி படிப்புக்கு பாதிப்பு ஏற்ப டுமா? என்றார்.

அதற்கு அவர், உலகம் முழுவதும் கொரோனா தொற்று உள்ளது. எனவே தான், பொதுத்தேர்வுவைக் காமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், பாதிப்புஏற்பா டாது என பதில் அளித்தார். மற்றொரு மாணவி உங்க ளுக்கு பிடித்த ஆசிரியர் யார்? என்று கேட்டார். அதற்கு அவர். நான் 2ம் வகுப்பு படித்தபோது ஒரு டீச்சரை நன்கு பிடிக்கும்.

ஆனால், அவர் இப் போது எங்கே உள்ளார் என்று தெரியாது. நமக்கு நல்ல ஆலோசனைகள் சொல்லும் அனைவருமே ஆசிரியர்தான். அப்படி பார்க்கையில் நமக்கெல் லாம் சிறந்த ஆசிரியர் அம் மாதான் என பதில் அளித் தார்.

பொதுத்தேர்வு நடக் குமா?

இன்னொரு மாணவி, நடப்பு கல்வி ஆண்டில் பொதுத்தேர்வு நடக்குமா? என்றார்.அதற்கு அமைச்சர், 10,12-ம் வகுப்பு மாண வர்க ளுக்கு பொது தேர்வு நிச்சயமாக மார்ச் மாதத்தில் நடக்கும். அதேபோல் அரையா ண்டு தேர்வு டிசம் பரில் நடத்த திட்டமிட்டுள்ளது. முத ல்வரின் அனுமதி பெற்று கல்வி அதிகாரிகளுக்கு சுற் றறிக்கை அனுப்பப்படும். அதில் எவ்வித சந்தேக மும் வேண்டாம். படிப் பதை விட்டு விடாதீர்கள் என அறிவுரை கூறினார்.

தொடர்ந்து மாணவிகள், அமைச்சர் என்ன படித்துள் ளீர்கள், அரசியலுக்கு எப் படி வந்தீர்கள்? என பல் வேறுகேள்விகளை கேட்டு ஆச்சரியப்படுத்தினார்கள்.

அவற்றுக்கு பதில் அளித்த அமைச்சர், “தற் போது உங்கள் கவனம் எல் லாம்படிப்பு..படிப்புஎன்று தான் இருக்க வேண்டும்.

படித்த முடித்ததும் என் னவாகலாம்? என்பதைநீங் களேமுடிவுசெய்து விடுவீர் கள் என பதில் அளித்து பேசினார். முன்னதாக பொன்மலை பகுதி 28வது வார்டில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் செல வில் கட்டப்பட்ட அங்கன் வாடிமையத்தைஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் எஸ்.சிவராசு, அரியமங்க லம் உதவி ஆணையர் கம லக்கண்ணன் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment