வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க “புலம்பெயர் தமிழர் நல வாரியம்” என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு - Daily Dhuniya

Breaking

Wednesday, October 6, 2021

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க “புலம்பெயர் தமிழர் நல வாரியம்” என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு

செய்தி வெளியீடு எண்:842

நாள்:06.10.2021

செய்தி வெளியீடு

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க “புலம்பெயர் தமிழர் நல வாரியம்” என்ற புதிய வாரியம் தோற்றுவிக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு

உலகளாவிய இனம் ஒன்று உண்டென்றால் அது தமிழினம் தான். தொன்மை மிக்க இந்த தமிழினம் பரவிய நாடுகளின் பட்டியல் பெரிது தொல் பழமை நாகரிகப் பாரம்பரியம் உள்ள சில இனங்களில் தமிழினமும் ஒன்று! அப்படி கடல் கடந்து, நாடுகள் கடந்து வாழும் வெளிநாடுவாழ் தமிழினத்துக்கு நம்பிக்கை தரும் வகையில் வெளியிடப்படுகிறது. ஒரு முக்கிய அறிவிப்பு

உலகின் பெரும்பான்மை நாடுகளில் வாழும் இனமாக நம்முடைய தமிழினம்தான் இருக்கிறது. 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், 60க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். வணிகம் செய்வதற்காகச் சென்றார்கள். வாழ்வதற்காகச் சென்றார்கள். வேலைகள் தேடிச் சென்றார்கள். கடற்கோள்களில் இருந்து தப்புவதற்காகச் சென்றார்கள். தப்பிச் செல்வதற்காகச் சென்றார்கள். புதிய இடங்களை அறிவதற்காகச் சென்றார்கள். இப்படிப் பலருக்கும் பல நோக்கங்கள் இருந்திருக்கும். இத்தகைய இடப்பெயர்வுகள் காலம்காலமாக நடந்து வருகின்றன. எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும், அவர்களுக்கு தமிழ்நாடுதான் தாய்வீடு. அவர்கள் மீது அன்பு செலுத்துவது மட்டுமல்ல, அரவணைப்பதும், பாதுகாப்பதும் தாய்த்தமிழ்நாட்டின் கடமையாகும். இப்படி பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழும் தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கவும் உதவிகளைச் செய்யவும் தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது.

No comments:

Post a Comment