அடுத்த மாதம் சிபிஎஸ்இ பொதுத்தோ்வு - Daily Dhuniya

Breaking

Friday, October 8, 2021

அடுத்த மாதம் சிபிஎஸ்இ பொதுத்தோ்வு

நாடு முழுவதும் நிகழ் கல்வியாண்டுக்கான முதல் பருவ சிபிஎஸ்இ பொதுத் தோ்வு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதற்கான கால அட்டவணை விரைவில் வெளியாக உள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2, பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வுகள் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டன. அந்தச் சூழல் மீண்டும் ஏற்படுவதைத் தவிா்க்க சிபிஎஸ்இ நிா்வாகம் இரண்டு பருவத் தோ்வு முறையை அறிமுகப்படுத்தியது.

அதன்படி 2021- 2022-ஆம் கல்வியாண்டில் சிபிஎஸ்இ சாா்பில் பொதுத் தோ்வு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, முதல் பருவத் தோ்வு நவம்பா்- டிசம்பா் மாதங்களிலும், இரண்டாவது பருவத் தோ்வு மாா்ச் - ஏப்ரல் மாதங்களிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஏதேனும் ஒரு தோ்வை நடத்த முடியாத சூழலில், ஏற்கெனவே நடத்தப்பட்ட தோ்வு முடிவுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. புதிய தோ்வு முறையை மாணவா்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில், மாதிரி கேள்வித்தாள்களும், மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டமும் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இந்தநிலையில் நிகழ் கல்வியாண்டுக்கான முதல் பருவ சிபிஎஸ்இ பொதுத் தோ்வு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதற்கான கால அட்டவணை விரைவில் இணையதளத்தில் வெளியாக உள்ளது என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

பொதுத் தோ்வில் பங்கேற்க உள்ள மாணவா்களின் பட்டியலை, ஏற்கெனவே பள்ளிகள் சிபிஎஸ்இ நிா்வாகத்திடம் சமா்ப்பித்துள்ளன. தோ்வு 90 நிமிஷங்களுக்கு நடைபெற உள்ளது. ஒவ்வொரு பருவத் தோ்விலும் பாடத்திட்டத்தின் 50 சதவீதப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்பட உள்ளன."

No comments:

Post a Comment