பயோடெக்னாலஜி படிப்பு துவங்கப்படும்: அமைச்சர் பொன்முடி - Daily Dhuniya

Breaking

Monday, October 11, 2021

பயோடெக்னாலஜி படிப்பு துவங்கப்படும்: அமைச்சர் பொன்முடி

பயோடெக்னாலஜி படிப்பு அண்ணா பல்கலையில் துவங்கப்படும்,'' என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

தற்போது இந்தியாவை ஆட்டி படைத்து வரும் கொரோனா பிரச்னை, பாலைவன வெட்டுக்கிளி பிரச்னை எதுவாக இருந்தாலும் தீர்வு காண அதிகம் நம்புவது பயோ டெக்னாலஜியைத் தான். இந்தியாவில் மாறிவரும் வேளாண்மை, உணவு உற்பத்தி, மருத்துவம், பொதுச் சுகாதாரம் என முதன்மையாகப் பிரிவுகளில் ஆராய்ச்சியையும், மேம்படுத்தலையும் முன்னெடுக்கும் மிக முக்கிய துறையாக பயோ டெக்னாலஜி உள்ளது. பொதுவாக, பயோடெக்னாலஜி படிப்பில் மருத்துவம் மற்றும் உடல்நலம் சார்ந்த அறிவையும், உயிரியல் சார்ந்த ஆராய்ச்சி முன்னேற்றங்களையும் கற்றுக்கொள்ள முடியும். உயிரினங்களில் நுண்ணுயிர்கள் பரவல் குறித்தும், அதைக் கட்டுப்படுத்துவதையும், அதற்கான மருத்துவத்தையும் ஆராய்ச்சி நோக்கோடு அணுகுகிறது பயோடெக்னாலஜி. இந்த படிப்புக்கான நிதியை மத்திய அரசு தான் ஒதுக்குகிறது.

இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்ததாவது: பயோடெக்னாலஜி படிப்புக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும். அப்படி ஒதுக்காவிட்டாலும் சென்னை அண்ணா பல்கலையில் பயோடெக்னாலஜி வகுப்புகள் துவங்கப்படும். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் நிதி ஒதுக்கக்கோரி மத்திய அரசுக்கு விரைவில் கடிதம் எழுதுவார். இன்ஜினியரிங் கல்லுாரிகளில் இந்தாண்டு காலி இடங்கள் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment