மாவட்ட கல்வி அலுவலர்கள் இடமாற்றம் - ஆசிரியர் சங்கங்கள் வரவேற்பு - Daily Dhuniya

Breaking

Saturday, October 16, 2021

மாவட்ட கல்வி அலுவலர்கள் இடமாற்றம் - ஆசிரியர் சங்கங்கள் வரவேற்பு

விருப்ப மாறுதல் அடிப்படையில் சென்னையில் நடந்த கலந்தாய்வில் பங்கேற்று நாமக்கல், திருச்செங்கோடு மாவட்ட கல்வி அலுவல வர்கள் இடமாறுதல் பெற் றுள்ளதை, ஆசிரியர் சங்கங் கள் வரவேற்றுள்ளன.

தமிழக பள்ளி கல்வித்து றையில் பணியாற்றிவரும். முதன்மை கல்வி அலுவ லர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், விரும்பிய இடங்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியின் போது, ஆளுங்கட்சியின ரின் உதவியுடன் செல்ல முடிந்தது. ஆளுங்கட்சியி னர் தங்களுக்கு ஒத்துவராத மாவட்ட கல்வி அலுவலர் கள் மற்றும் முதன்மைகல்வி அலுவலர்களை. தங்கள் விருப்பத்துக்கு மாற்றம் செய்து வந்தனர்.

கடந்தாண்டு மட்டும் நாமக்கல் மாவட்டத்தில் 5டிஇஓக்கள் மாற்றப்பட்ட னர். குளித்தலையில் பணி யாற்றி வந்தவர், திடீரென நாமக்கல் மாற்றப்பட்டார். நாமக்கல்லில் பணியாற் றியவர் சேலத்துக்கும்,பெரம்பலூரில் பணியாற் றியவர் நாமக்கல்லுக்கும் மாறுதல் பெற முடிந்தது. நாமக்கல் மாவட்டத்தில் அரசுபள்ளிகளில்தலைமை ஆசிரியராக பணியாற்றிய வர்கள் பதவிஉயர்வுபெற்று, இதே மாவட்டத்தில் டிஇ ஓக்களாக பணியாற்றவும், ஆளுங்கட்சியினர் ஏற் பாடு செய்தனர். இடமா றுதல் பெற்று கொடுக்க பள்ளி கல்வித்துறையில் பல்வேறு புரோக்கர்கள் செயல்பட்டனர்.

இந்நிலையில், சட்ட மன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தற் போது பள்ளி கல்வித்துறை யில்பணியாற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, சீனியாரிட்டி அடிப்படை யில் கலந்தாய்வு மூலம் இடமாறுதல் அளிக்கப்பட் டுள்ளது. கடந்த இரு தினங் களுக்கு முன் சென்னையில் இதற்கான கலந்தாய்வு நடை பெற்றது. இதில் தமிழகம் முழுவதும் டிஇக்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதன் படி நாமக்கல் டிஇஓ பால சுப்பிரமணியம், சேலம் மாவட்டம் சங்ககிரிக்கு மாறுதல் பெற்றுள்ளார். திருச்செங்கோடு டிஇஓ ரவி, தர்மபுரி மாவட்டம் அரூருக்கும் இடமாறுதல் பெற்றுள்ளார். பெருந்துறை மாவட்ட கல்வி அலுவலர் ராமன், நாமக்கல் டிஇஓ வாகவும், இடைப்பாடி மாவட்ட கல்வி அலுவலர் விஜயா, திருச்செங்கோடு டிஇஓவாகவும் விருப்ப மாறுதல் கலந்தாய்வு மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.தற் போது டிஇஓக்கள் இடமாறு தல்முழுக்க, முழுக்கவிருப்ப மாறுதல் அடிப்படையில் நடைபெற்றுள்ளதால், அர சின் இந்த முடிவுக்கு பல் வேறு ஆசிரியர் சங்கங்கள் வரவேற்புதெரிவித்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக கல் வித்துறை அலுவலகங்களில், பல ஆண்டாக ஒரே இடத் தில் பணியாற்றி வருபவர் களுக்கு விருப்ப மாறுதல் அளிக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment