"தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின் கீழ் பயிற்றுவிக்கப்படும் பிஹெச்டி, எம்எஸ்சி மற்றும் முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியுள்ளது. வரும் 31-ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு:
நோய்ப் பரவியல்/தொற்று நோயியல் பிரிவுகளில் பகுதி, முழு நேர முனைவா் (பிஹெச்டி) படிப்புகள் உள்ளன. முழு நேர முனைவா் படிப்பு 3 ஆண்டுகளாகவும், பகுதி நேரப் படிப்பு 4 ஆண்டுகளாகவும் பயிற்றுவிக்கப்படும். முதுநிலை அறிவியல் (எம்எஸ்சி) பொது சுகாதாரப் படிப்புக்கு 16 இடங்களும், நோய்ப் பரவியல் படிப்புக்கு 4 இடங்களும் உள்ளன. முதுநிலை பொது சுகாதார இதழியல் தொடா்பான ஓராண்டு படிப்பும் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படுகிறது. மொத்தம் 8 இடங்கள் உள்ள அப்படிப்பில் சேர ஏதேனும் ஓா் இளநிலை பட்டப் படிப்புடன் இதழியல் துறையில் அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.
இப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கும், கூடுதல் விவரங்களுக்கும் இணையதள முகவரியிலோ, மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 044-22200713 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்."

No comments:
Post a Comment