சுருக்கெழுத்து தேர்வில் நடந்த பிரச்னைகள் குறித்து விசாரணை நடத்தி, ஆலோசனை வழங்க நிபுணர் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரக தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு வணிகவியல் தேர்வுகளான தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் ஆகியவற்றுக்கு, தமிழ், ஆங்கில மொழிகளில் இளநிலை, முதுநிலை தேர்வுகள், பிப்ரவரி மற்றும் ஆகஸ்டில், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வாயிலாக நடத்தப்படும்.
கடந்த ஆண்டு பிப்ரவரி யில் நடக்கவிருந்த தேர்வுகள், கொரோனா தொற்றால் நடத்தப்படவில்லை. மாறாக, செப்., 18, 19ம் தேதிகளில் தட்டச்சு தேர்வுகள் நடந்தன.
செப்., 24ல் கணக்கியல் தேர்வும், 25, 26ல் சுருக்கெழுத்து தேர்வும் நடந்தன.செப்., 27, 28ல் உயர் வேக சுருக்கெழுத்து தேர்வும் நடத்தப்பட்டது.
இதில், 26ம் தேதி நடந்த ஆங்கில சுருக்கெழுத்து தேர்வில், முதுநிலை தாள்களில் வாசிப்பு, உச்சரிப்பு மற்றும் ஒலிப்பதிவு சரியாக இல்லை என, மாணவர்களிடம் இருந்து புகார்கள் பெறப்பட்டன.
இது குறித்து ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை வழங்க, அனுபவமிக்க நிபுணர்கள் இடம் பெற்ற குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு விசாரணை நடத்தி வழங்கும் ஆலோசனைகளின்படி, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment