கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வாகன ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழ் உள்ளிட்டவற்றை புதுப்பிக்க அளிக்கப்பட்டுள்ள அவகாசம், வரும் 31ம் தேதிக்குப் பின் நீட்டிக்கப்படாது' என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
வாகன ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவு சான்றிதழ் உள்ளிட்டவற்றை புதுப்பிக்க கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் ஏழு முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. ஏழாவது முறைகடந்த 2020 மார்ச்சில் இருந்து அளிக்கப்பட்ட இந்த அவகாசம் கடந்த மாதம் ஏழாவது முறையாக நீட்டிக்கப்பட்டது. அதன்படி வரும் 31ம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும். இந்நிலையில், மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளதாவது: வாகன ஆவணங்களைப் புதுப்பிக்க, வரும் 31ம் தேதிக்குப் பின் அவகாசம் நீட்டிக்கப்படாது. அதனால், புதுப்பிக்கக் கோரி நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பங்கள் மீதும் இம்மாத இறுதிக்குள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சிறப்பு முகாம்
மக்கள் நேரடியாக வருவதை தவிர்க்கும் வகையில் 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிப்பது, பரிசீலிப்பதை மேற்கொள்ள வேண்டும். தேவைப்படும் பகுதிகளில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சூழ்நிலைக்கு ஏற்ப இந்த கால அவகாசத்தை அந்தந்த மாநிலங்கள் நீட்டித்துக் கொள்ளலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து புதுப்பிப்பதற்கான அவகாசத்தை நவ., 30ம் தேதி வரை நீட்டித்து டில்லி அரசு அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது.

No comments:
Post a Comment