அரசின் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் 20ம் தேதி தொடக்கம் - Daily Dhuniya

Breaking

Thursday, October 14, 2021

அரசின் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் 20ம் தேதி தொடக்கம்

அரசின் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் 20ம் தேதி தொடக்கம்

பத்தூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் மத்திய, மாநில அரசால் அறிவிக்கப்படும் பல்வேறு பணிக்காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு துறைகளில் பல்நோக்கு பணியாளர், பெண் கள் படை பயிற்சிவிப்பாளர், மருத்துவ உதவியாளர் போன்ற 3261 பல்வேறு பணிக்காலியிடங்கள் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இப்பணி காலி யிடங்களுக்கு www.ssc.nic.in என்ற தேர்வாணைய இணையதளம் வாயிலாக விண்ணப்பித்த விண்ணப்ப தாரர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் 20.10.2021 முதல் திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிக்காட்டல் மையத்தில் நடைபெற வுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே, இப்பயிற்சி வகுப்பில் பங்குபெற விருப்பம் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அல்லது 04179-222033 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயனடை யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மத்திய, மாநில அரசு பணிகளுக்கான பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் கிராமப் புற மாவணர்கள், நகர்புற மாணவர்கள் பயன்பெறும் பொருட்டு வேலைவாயப்பு மற்றும் பயிற்சித்துறையின் பிரத்யேக இணைய தளமான https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் மென் பாடக்குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் மாதிரி தேர்வுகள் ஆகியன பதிவேற்றம் செய்யப்பட் டுள்ளன. எனவே மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் அனைத்து மாணவர்களும் தங்களது விவரங்களை பதிவேற்றம் செய்து பயனடையுமாறு கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment