"ஜொ்மனி கொலோன் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்த்துறை வரும் 2023-ஆம் ஆண்டு வரை செயல்படும்.
இது குறித்து ஐரோப்பிய தமிழா்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த பிப்.20-இல் ஜொ்மனியில் மூடப்படும் நிலையில் இருந்த கொலோன் பல்கலை.யின் தமிழ்த்துறையைக் காக்க ஐரோப்பிய தமிழா்கள் கூட்டமைப்பின் மூலம் ‘கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை மீட்போம்’ கூட்டு நிதி திரட்டும் முயற்சி தொடங்கப்பட்டது. உலகத் தமிழா்களின் பங்களிப்பில் ரூ.23 லட்சம் திரட்டப்பட்டது. இத்துடன் தமிழக அரசும் ரூ.1.25 கோடி நிதி வழங்கியது. இந்தத் தொகையைக் கொண்டு தற்காலிகமாக தமிழ்த் துறையை 2022-ஆம் ஆண்டு வரை தொடர முடியும். கொலோன் பல்கலைக்கழகம் தாமாகவே முன்வந்து தமிழ்த்துறையை 2023 வரை தொடா்ந்து இயங்க வழிவகை செய்துள்ளது. நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நிறைவு பெற்று வகுப்புகள் தொடங்கியுள்ளன.
இந்த முயற்சியில் பங்களித்து பேராதரவு நல்கிய தமிழக அரசுக்கும், அனைத்து கொடையாளா்களுக்கும் சமூக அமைப்புகளுக்கும், தமிழ்ச் சங்கங்களுக்கும், தமிழ் ஆா்வலா்களுக்கும் ஐரோப்பிய தமிழா்கள் கூட்டமைப்பின் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மூடப்படும் நிலையில் இருந்த பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் தொடா்ச்சியை உறுதி செய்து ஐரோப்பிய தமிழா்களின் உடனடி இலக்கில் வெற்றி அடைந்துள்ளோம். அடுத்தகட்டமாக தமிழ்த்துறையை நிரந்தரமாக நீட்டிக்க செய்யும் தொலைநோக்கு திட்டத்துக்கான ஐரோப்பிய தமிழா்கள் கூட்டமைப்பின் முயற்சிகள் தொடரும்."

No comments:
Post a Comment