CISCE 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வுகள் – முக்கிய அறிவிப்பு! - Daily Dhuniya

Breaking

Wednesday, September 8, 2021

CISCE 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வுகள் – முக்கிய அறிவிப்பு!

இந்திய பள்ளி சான்றிதழ் (CISCE) தேர்வுகளுக்கான கவுன்சில் 10 மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கான துணைத்தேர்வுகளை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

துணைத்தேர்வுகள்:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வந்த காரணத்தால் கடந்த ஆண்டு ஐஎஸ்சிஇ மற்றும் ஐஎஸ்சி வாரியத்தின் இறுதி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இவ்வாறு நேரடி தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் மாணவர்களுக்கு உள்மதிப்பீடு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. 10 ஆம் வகுப்பு தேர்வுகளின் மதிப்பீட்டிற்காக, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் பரிசீலிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிற்சிகள் மற்றும் செய்முறை தேர்வுகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் வழங்கப்பட்டது.

கல்வி வாரியம் வழங்கிய மதிப்பெண்களில் திருப்தியற்ற மாணவர்கள் மதிப்பெண் மேம்பாட்டு தேர்வில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய அறிவிப்பை தற்போது கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில், தேர்ச்சி சான்றிதழ்களை பெறாத மற்றும் 2022 இல் தேர்வுகளுக்கு திரும்ப விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் அந்தந்த பள்ளிகளில் வழக்கமான மாணவராக பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு காரணங்களினால் தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்கள், துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதிக மதிப்பெண்களுக்காக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களுக்கு மட்டுமே தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் முழுமையாக இரண்டு இறுதிப்பருவ தேர்விலும் கலந்து கொள்ள வேண்டும். துணைத்தேர்வில் வினாத்தாள் முறை ஐஎஸ்சி மற்றும் ஐசிஎஸ்இ தேர்வுகளில் பின்பற்றப்படும் வகையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment