பட்டதாரி ஆசிரியராக தரம் உயர்த்தாமல் ஏமாற்றம்; மாநில பொது செயலாளர் குற்றச்சாட்டு - Daily Dhuniya

Breaking

Thursday, September 9, 2021

பட்டதாரி ஆசிரியராக தரம் உயர்த்தாமல் ஏமாற்றம்; மாநில பொது செயலாளர் குற்றச்சாட்டு

இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரியாக தரம் உயர்த்தும் அறிவிப்பு கல்வி மானிய கோரிக்கையில் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொது செயலாளர் ஏ.சங்கர் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

தமிழக பட்ஜெட்டில் இடைநிலை ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான அரசு, உதவி பெறும் உயர், மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து இடைநிலை ஆசிரியர் பணியிடத்தையும் பட்டதாரி ஆசிரியராக தரம் உயர்த்தி, அப்பணியிடத்திலேயே இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரியாக உட்படுத்த வேண்டும் என சட்டசபை கல்வி மானிய கோரிக்கையில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்து ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்தோம்.

அகவிலைப்படி உயர்வை 2021 ஜூலை 1 தேதியிட்டு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் 2022 ஜன., முதல் தருவதாக கூறி ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளனர், என்றார்.

No comments:

Post a Comment