தொழிற்கல்வி பட்டப்படிப்பு மாணவர்களுக்கு, முதல்வரின் நிவாரண நிதியில் உதவி தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் குறைந்துள்ளதால், அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு, கல்லுாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து கல்லுாரிகளுக்கும், உயர் கல்வித்துறை சார்பில் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தொழிற்கல்வியான, பி.இ., - பி.டெக்., - எம்.பி.பி.எஸ்., சட்டம் உள்ளிட்ட படிப்புகளை படிக்கும் மாணவர்களில், ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களில், ஆண்டுக்கு 200 பேர் தேர்வு செய்யப் பட்டு, முதல்வரின் நிவாரண நிதியின் கீழ் உதவி தொகை வழங்கப்படுகிறது.இந்த திட்டம், 18 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
இந்த திட்டத்தில் தற்போது, ஒவ்வொரு மாணவருக்கும் படிக்கும் காலத்தில், ஒரு முறை மட்டும் தலா, 50 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும். பயன் பெற விரும்பும் மாணவர்கள், மாவட்ட கலெக்டர்களிடம் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். அங்கிருந்து விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்படும். அவை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு நிதி உதவி வழங்கப்படும்.
இந்நிலையில், தொழிற்கல்வி படிப்புகளில், ஒற்றை சாளர முறையில் சேர்க்கை பெறும் மாணவர்கள் அதிகரித்து வரும் நிலையில், முதல்வரின் நிவாரண நிதியில் உதவி கேட்கும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வருவது குறைவாக உள்ளது.
எனவே, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உரிய விண்ணப்பங்களை பெற்று, முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment