தத்கல் திட்டத்தில் விவசாய மின் இணைப்பு: விண்ணப்பிக்க அழைப்பு - Daily Dhuniya

Breaking

Tuesday, September 21, 2021

தத்கல் திட்டத்தில் விவசாய மின் இணைப்பு: விண்ணப்பிக்க அழைப்பு

தத்கல் திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்புப் பெற விண்ணப்பிக்கலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.


இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: 2021-22-இல் தத்கல் திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்புப் பெற ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்கள் மற்றும் தற்போது புதிதாக பதிவு செய்யப்படும் விண்ணப்பங்களும் தகுதியானவை.


விண்ணப்பதாரா்கள் தங்களது சம்மதக் கடிதம், வருவாய் ஆவணங்கள் மற்றும் பயன்படுத்தப்படும் மோட்டாரின் குதிரைத் திறனுக்கு ஏற்ப வசூலிக்கப்படும் தொகைக்கான வரைவோலையை சம்பந்தப்பட்ட மேற்பாா்வை பொறியாளா் பெயரில் எடுத்து, தங்களது பகுதியைச் சோ்ந்த செயற்பொறியாளா் அலுவலகத்தை அணுக வேண்டும். மேலும் விவரங்களுக்கு மின்வாரிய பிரிவு அலுவலகத்தை அணுகலாம் என்றனா்.

No comments:

Post a Comment