தேர்வு நடக்கும்... அனைவரும் ‛ஆல் பாஸ்: பாக்., கல்வி அமைச்சர் அறிவிப்பு - Daily Dhuniya

Breaking

Tuesday, September 14, 2021

தேர்வு நடக்கும்... அனைவரும் ‛ஆல் பாஸ்: பாக்., கல்வி அமைச்சர் அறிவிப்பு

கோவிட் வைரஸ் பரவலால் பள்ளிகள் சரிவர இயங்காத நிலையில், மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி அடைந்தவர்களாக அறிவிப்பதாக பாகிஸ்தான் கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.


பாகிஸ்தானில் மாகாணங்களின் கல்வி அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டத்தை அரசு ஒருங்கிணைத்தது. இதில் மத்திய கல்வி அமைச்சர் ஷபக்த் மஹமூத் தலைமை வகித்தார். அப்போது அனைத்து மாகாண கல்வி அமைச்சர்களுமே 'மெட்ரிக், இன்டர்மீடியட் தேர்வுகளுக்குத் தயாராவதில் மாணவர்களுக்கு சிக்கல் இருந்தது. இதனால் அவர்களுக்கு சலுகை வழங்க வேண்டும்' எனத் தெரிவித்தனர்.


இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் ஷபக்த் மஹமூத் கூறுகையில், 'மாணவர்கள் தேர்ச்சியடையத் தவறும் ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்களுக்கு 33 சதவீத மதிப்பெண் இலவசமாக வழங்கப்படும். ஆனால் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். பாடத்திட்டம் ஏதும் குறைக்கப்படமாட்டாது. மாணவர்கள் இந்த பெருந்தொற்று காலத்துக்கு இடையேயும் முழுக் கவனத்தையும் கல்வியில் செலுத்த வேண்டும். வரும் 16ம் தேதி முதல் அனைத்துக் கல்வி நிலையங்களும் திறக்கப்படும்' என்றார்.

No comments:

Post a Comment