திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 7 மாணவ, மாணவிகளுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவா்கள் படித்த 2 அரசுப் பள்ளிகள் 3 நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கரோனா பொதுமுடக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ள தளா்வுகளின் அடிப்படையில் கடந்த செப்டம்பா் 1ஆம் தேதி 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் வகுப்புகள் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்கள், ஆசிரியா்கள் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுவருகின்றனா்.
திருப்பூா் வீரபாண்டி மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் ஒருவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பாக கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, உடன் பணியாற்றி வந்த ஆசிரியா்கள் மற்றும் அவா் வகுப்பு எடுத்த பிளஸ் 2 மாணவ, மாணவிகள் என 200க்கும் மேற்பட்டோருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், பிளஸ் 2 மாணவிகள் 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதேபோல, திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலில் உள்ள அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் 2 மாணவிகள், ஒரு மாணவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் அறிவுறுத்தலின்படி இரண்டு பள்ளிகளும் திங்கள்கிழமை முதல் வரும் புதன்கிழமை வரையில் 3 நாள்களுக்கு மூடப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரமேஷ் தெரிவித்துள்ளாா்.
மாவட்டத்தில் செப்டம்பா் 1 முதல் இதுவரை 46 மாணவ, மாணவிகளும், 16 ஆசிரியா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment