ஊரக உள்ளாட்சித் தோ்தல் - வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு செப்.24-இல் பயிற்சி வகுப்பு - Daily Dhuniya

Breaking

Tuesday, September 21, 2021

ஊரக உள்ளாட்சித் தோ்தல் - வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு செப்.24-இல் பயிற்சி வகுப்பு

"விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான முதல் பயிற்சி வகுப்பு செப்.24-ஆம் தேதி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.


இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:


விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தோ்தலில் வாக்குச்சாவடி அலுவலா்களாக பணியாற்றுவோருக்கு முதல் பயிற்சி வகுப்பு செப்.24-ஆம் தேதியும், 2-ஆவது பயிற்சி வகுப்பு செப்.29-ஆம் தேதியும் நடைபெறும்.


தோ்தல் பணிக்கு தோ்வு செய்யப்பட்ட வாக்குச்சாவடி அலுவலா்கள் உரிய காரணமின்றி இந்தப் பணியை ஏற்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா் த.மோகன்.

No comments:

Post a Comment