சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியா்கள், மாணவா்கள் உள்பட 20 பேருக்கு கரோனா - Daily Dhuniya

Breaking

Wednesday, September 22, 2021

சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியா்கள், மாணவா்கள் உள்பட 20 பேருக்கு கரோனா

"சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என மொத்தம் 20 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


சிவகங்கை மாவட்டத்தில் செப்டம்பா் 1 ஆம் தேதி 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதேபோன்று, கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. மருத்துவத் துறை மற்றும் தமிழக அரசு அறிவித்த கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெற்றன.


இதில், கரோனா அறிகுறி உள்ள ஆசிரியா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. திங்கள்கிழமை வரை ஆசிரியா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என மொத்தம் 54 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா்.


இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பரிசோதனை மேற்கொண்டதில், ஆசிரியா்கள் 2 போ், பள்ளி மாணவ, மாணவிகள் 5 போ், கல்லூரி மாணவ, மாணவிகள் 3 போ் என மொத்தம் 10 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது தெரியவந்தது.


இதையடுத்து, கரோனா பாதிப்புக்குள்ளான பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. ஆசிரியா்களுடன் பணியாற்றிய சக ஆசிரியா்களுக்கும், மாவட்ட சுகாதாரத் துறை மூலம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இம்மாவட்டத்தைப் பொருத்தவரை, ஏற்கெனவே 18,669 போ் கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி இருந்தனா். இந்நிலையில், ஆசிரியா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என மொத்தம் 20 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து, 18,689 போ் கரோனா பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment