NEET 2021 தேர்வு ஒத்திவைப்பு? மாணவர்கள் எதிர்பார்ப்பு! - Daily Dhuniya

Breaking

Tuesday, August 17, 2021

NEET 2021 தேர்வு ஒத்திவைப்பு? மாணவர்கள் எதிர்பார்ப்பு!

செப்டம்பர் 12ம் தேதி இளங்கலை நீட் 2021 தேர்வு நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், நீட் தேர்வை தள்ளிவைக்கும்படி மாணவர்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.
நீட் தேர்வு:
தேசிய தகுதி மற்றும் மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு வருடத்திற்க்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படுகிறது. நீட் தேர்வில் தேர்வானவர்கள் மட்டுமே இளங்கலை மருத்துவ படிப்பில் அனுமதிக்கப்படுவார்கள். நீட் தேர்வு உலகத்திலேயே நடக்கும் மிகப்பெரிய தேர்வாகும். ஆண்டு தோறும் 16 லட்சம் பேர் இத்தேர்வை எழுதுகின்றனர். கொரோனா அச்சம் காரணமாக நீட் நுழைவு தேர்வு நடப்பாண்டில் வழக்கத்தை விட தாமதமாக நடத்தப்படுகிறது. நடப்பு ஆண்டில் நீட் தேர்வு செப்டம்பர் 12ம் தேதி நடக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கான விண்ணப்பம் மற்றும் கட்டணம் செலுத்தும் அவகாசம் அனைத்தும் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி இரவு 11: 50 மணியுடன் முடிவடைந்துள்ளது. விரைவில் 2021 நீட் தேர்வுக்கான நுழைவு சீட்டு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாணவர்கள் பல்வேறு காரணங்களுக்காக நீட் தேர்வை தள்ளிவைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். அதாவது, நீட் தேர்வு பல்வேறு மாநில நுழைவு தேர்வு மற்றும் CBSE துணை தேர்வுகளுடன் ஒரே நேரத்தில் வருகிறது.
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மதிப்பெண் மேம்பாட்டு மற்றும் துணை தேர்வுகள் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 15 வரை நடக்கிறது. சிபிஎஸ்இ கணித தேர்வு செப்டம்பர் 13ம் தேதி நடக்கிறது. இதனால் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு சிக்கல் எழ வாய்ப்புள்ளது. ICAR AIEEA 2021 UG (BSc சேர்க்கைக்கான) தேர்வுகள் செப்டம்பர் 7, 8, 13 ஆகிய தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு அடுத்த நாள் இதில் ஒரு தேர்வு நடக்க இருக்கிறது. மேலும், MHT CET செப்டம்பர் 4-20 வரை திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்ததாக, கர்நாடகா CoMEDK தேர்வு செப்டம்பர் 14 அன்றும், ஒடிசா JEE செப்டம்பர் 6 முதல் 18 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் பிரதமர் அலுவலகம், PM மோடி மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரை #PostponeNEETUG என்ற ஹேஷ்டேக் மூலம் தங்கள் பதிவுகளில் டேக் செய்து வருகின்றனர். இது குறித்த மத்திய அரசின் முடிவை பொறுத்திருந்து தான் காண வேண்டும்.

No comments:

Post a Comment