சர்வே ஆப்:
கொரோனா தொற்று கடுமையாக பரவியதன் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. ஒன்றரை ஆண்டு காலமாக பள்ளிகள் செயல்படாத நிலையில் மாணவர்களின் குறிப்பாக பெண் பிள்ளைகள் மற்றும் இருபாலாரின் கல்வி பாதிக்கப்பட்டதை உணர்ந்து தற்போது கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது. மாணவர்கள் தங்களது ஆரம்பப் பள்ளி படிப்பை முடிக்கும் முன்னரே அதிக அளவில் இடைநின்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தைகள் தொழிலாளர்களாகி வருகின்றனர்.
14 முதல் 19 வயதானவர்கள் கட்டுமான தொழிலாளர்களாகவும், செங்கல் சூளை, கல், மணல் குவாரி மற்றும் தொழிற்சாலைகளில் வேலைக்கு சென்றுள்ளனர். இதனால் ஏராளமான குழந்தை தொழிலாளர்களும் உருவாகியுள்ளனர். இதனை தடுப்பதற்காக கணக்கெடுப்பு நடத்தி மீண்டும் மாணவர்களை பள்ளியில் அனுமதிப்பதாக கூறப்படுகிறது. இதற்காக உருவாக்கப்பட்ட சர்வே ஆப் மூலம் பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களை வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணிகள் தொடங்க உள்ளது.
இதுவரை பள்ளிகளில் இருந்து பாட புத்தகங்களை பெறாதவர்கள் பட்டியலை பெற்று கணக்கெடுப்பு பணியை துவங்குகின்றன. சர்வே ஆப் மூலம் நடைபெற உள்ள கணக்கெடுப்பானது ஆகஸ்ட் 10ம் தேதி முதல் ஆகஸ்ட் 31 தேதி வரை நடைபெறும். காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை மேற்கொள்ளப்படும் இந்த கணக்கெடுப்பில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் உட்பட அங்கன்வாடி ஊழியர்கள் என பலர் பங்கு பெறுகின்றனர். சர்வே ஆப் மூலம் மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்பின் மூலம் இடைநின்ற மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment