தமிழக பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரம் – CEO உத்தரவு - Daily Dhuniya

Breaking

Monday, July 5, 2021

தமிழக பள்ளிகளில் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரம் – CEO உத்தரவு

அரசு பள்ளிகளில் ஜூன் மாதம் 8 ஆம் தேதி வரையுள்ள நிலவரப்படி காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களின் விவரங்களை சேகரித்து அவற்றை அனுப்பி வைக்க வேண்டும் என கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியர் பணியிடங்கள்:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது கொரோனா பரவல் எதிரொலியாக தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக படங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் அரசு பள்ளிகளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணிகள் தடைபட்டிருந்தது.

அந்த வகையில் தற்போது பள்ளிகளில் புதிய கல்வியாண்டின் வகுப்புகள் துவங்க உள்ளதால், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் படி கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் உள்ள முதுகலை ஆசிரியர்களின் காலிப்பணியிட விவரம் குறித்து தகவல் அளிக்கும் படி முதன்மை கல்வி அலுவலர் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதாவது கடந்த 08.06.2021 ஆம் நிலவரப்படி, அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிட விவரங்களை கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து, அவற்றை 10.07.2021 மாலை 5 மணிக்குள் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து கையொப்பமிட்ட நகலை கூரியர் மூலம் முதன்மை அலுவலகத்துக்கு அன்றே அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment