தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் – ஊழியர்கள் கோரிக்கை - Daily Dhuniya

Breaking

Monday, July 5, 2021

தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் – ஊழியர்கள் கோரிக்கை

தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் – ஊழியர்கள் கோரிக்கை

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்:
தமிழகத்தில் 2003ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தில் பணிக்கு பின் வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டு பணியின் போது பிடிக்கப்பட்ட தொகை மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை அனைத்து அரசு ஊழியர்களும் எதிர்த்தனர். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசு ஊழியர்கள் அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவில்லை.

கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என முக ஸ்டாலின் உறுதியளித்தார். அதன் பின் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஓய்வூதிய திட்டம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பட்டது. புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும் எனவும் அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஓய்வூதிய திட்டம் குறித்த எந்த அறிவிப்புகளும் வெளிவரவில்லை.

தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஒன்றியம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்றது. அப்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் மற்றும் கலந்தாய்வு முறையில் பணி மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment