தமிழ் கற்க தனி படிப்பு அரசுக்கு கமல் யோசனை - Daily Dhuniya

Breaking

Wednesday, July 21, 2021

தமிழ் கற்க தனி படிப்பு அரசுக்கு கமல் யோசனை

தமிழ் கற்க தனி படிப்பு அரசுக்கு கமல் யோசனை

‘உலகின் எந்த மூலையில் வசிக்கும் எந்த நாட் டைச் சர்ேந்தவரும் தமிழ் கற்க, நெறிப்படுத்தப் பட்ட பாடத் திட்டம், தேர்வு முறை, அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் படிப்பை உருவாக்க வேண்டும்' என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் வலி யுறுத்தி உள்ளார். அவரது அறிக்கை: தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வந்து 17 ஆண்டுகளாகி ஆகிவிட்டன. ஆனால், மொழி வளர்ச்சிக்கு என்ன செய்தோம் என பார்த்தால் பெரிதாக ஒன்றும் இல்லை. ஒரு வழக்கில், 'தமிழ் மொழி வளர்ச்சிக்கு என தமிழக அரசு உரிய நடவ உக்கை எடுக்கவில்லை' என, உயர் நீதிமன்றமே கண்டித்தது. 'ஹிந்தி ஒழிக' என்பதுடன் கடமை முடிய வில்லை. 'தமிழ் வாழ்க' என உரக்கச் சொல்வ தோடு மட்டுமின்றி செயலிலும் காட்ட வேண்டும். பழம்பெருமை பேசும் வாய்ச்சொல் வீரர்கள் நாம் என, வரலாறு நம்மை பழித்து விடும். ஆங்கிலம் தவிர, பிற மொழிகள் ஆபத்தில் உள் ளன. தினம்தோறும் மொழிகள் செத்து வருகின்றன. சாகாவரம் பெற்ற தமிழே தடுமாறுகிறது. சீன மொழி யைக் கற்க, உலகில் 500க்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் உள்ளன.ஆங்கிலத்திற்கு பிரிட்டிஷ் கவுன்சில்; ஜெர்மன் மொழிக்கு கோத்தே சென்ரம்; பிரெஞ்சு மொழி கற்க அலையன்ஸ் ப்ராஞ்சசே என அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கும் பல அமைப்புகள் உள்ளன. அவ்வ ளவு ஏன், ஹிந்தியைப் பரப்ப ஹிந்தி பிரச்சார சபா உள்ளது. ஆனால், தமிழை முறையாகக் கற்று அங்கீ கரிக்கப்பட்ட சான்றிதழ் பெற, இன்னமும் ஓர் அமைப்பு இங்கே இல்லை. உலகின் எந்த மூலை யில் வசிக்கும் எந்த நாட்டைச் சேர்ந்தவரும் தமிழ் கற்க, நெறிப்படுத்தப்பட்ட பாடத் திட்டம், தேர்வு முறை, அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் படிப்பை உருவாக்க வேண்டும். இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment