தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாட்கள் – அரசு அறிவிப்பு! - Daily Dhuniya

Breaking

Friday, July 2, 2021

தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாட்கள் – அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் குறிப்பிட்ட தேதிகளில் விடுமுறை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ரேஷன் கடைகளுக்கு விடுப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையால் மக்கள் பெரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து போதிய வருமானம் இன்றி சிரமப்படுகின்றனர். எனவே மக்களுக்கு உதவும் வகையில் தமிழக முதல்வர் இலவச உணவு பொருட்களையும், கொரோனா நிவாரண தொகைகளையும் வழங்க உத்தரவிட்டார். அதன் படி ரேஷன் கடை ஊழியர்கள் வீடுகள் தோறும் டோக்கன்கள் வழங்கி அனைவருக்கும் பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கனில் இடம், வழங்கும் நேரம், ஆகியவைகளை குறிப்பிட்டு தேதி வாரியாக மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்குகின்றனர். மே மற்றும் ஜூன் மாதங்களில் நாள் ஒன்றுக்கு 200 குடும்பங்கள் வீதம் பொருட்களும், தொகைகளும் வழங்கப்பட்டது. இந்த இலவச பொருட்கள் ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக உள்ளது. மக்களுக்கு இலவச பொருட்களையும், நிதிகளையும் விரைவாக வழங்க ரேஷன் கடைகள் விடுமுறை நாட்களிலும் செயல்பட்டது.

பொருட்களை வழங்குவதற்கு கடந்த 2 மாதங்களில் மே மாதம் 16ம் தேதி, ஜூன் 4 ம் தேதி மற்றும் ஜூன் 11 ஆகிய விடுமுறை நாட்களிலும் ரேஷன் கடைகள் செயல்பட்டது. இதனால் ரேஷன் ஊழியர்களும் ஓய்வின்றி உழைத்தனர். எனவே இந்த விடுமுறை நாட்களில் ரேஷன் கடைகள் செயல்பட்டதற்காக அதனை ஈடு செய்யும் வகையில் தற்போது அரசு ஜூலை மாதம் (17.07.2021) (18.07.2021) ஆகிய தேதிகளிலும் ஆகஸ்ட் மாதம் (14.07.2021) ஆகிய தேதியிலும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை வழங்க உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment