தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னர் ஆசிரியர் கலந்தாய்வு – அரசுக்கு கோரிக்கை! - Daily Dhuniya

Breaking

Sunday, July 11, 2021

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னர் ஆசிரியர் கலந்தாய்வு – அரசுக்கு கோரிக்கை!

கொரோனா சூழ்நிலை என்பதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்ற அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில் பட்டதாரி ஆசிரியர்கள் ஒரு கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர். அதாவது பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

இது பற்றி தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைபள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பாளர் முருகேசன் அவர்கள் கூறுகையில், இந்த ஆண்டிற்கான பதவி உயர்வை பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனே அளித்திட வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் பிற அரசு ஊழியர்களை பாதுகாக்கும் வகையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் இளங்கலையில் ஒரு பாடம் படித்து, முதுகலையில் வேறொரு பாடம் படித்த ஆசிரியர்களுக்கு உயர் பதவி மறுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து உயர்நிலை தலைமை ஆசிரியர்களாக பட்டதாரி ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் இடமாறுதலுக்கான கலந்தாய்வை பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்பாக நடத்த வேண்டும். இதில் பங்கேற்பதற்கான நிபந்தனையை நீக்க வேண்டும். கலந்தாய்வில் கடந்த வருடம் பணிநிரவலால் தூரம் தொலைவில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை தருதல் வேண்டும். இது போன்ற பல கோரிக்கைகளை அவர் முன்வைத்து உள்ளார்.

No comments:

Post a Comment