தமிழக அரசின் நெசவுத்தொழில் டிப்ளமோ படிப்பு – ஜூலை 12 வரை விண்ணப்பம்! - Daily Dhuniya

Breaking

Monday, July 5, 2021

தமிழக அரசின் நெசவுத்தொழில் டிப்ளமோ படிப்பு – ஜூலை 12 வரை விண்ணப்பம்!

தமிழக அரசின் நெசவுத்தொழில் நுட்ப பயிலகத்தின் டிப்ளமோ படிப்புகளில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது இணையதளம் வழியாக தற்போது துவங்கியுள்ளது. மேலும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 12 வரை கொடுக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை
தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக கடந்த 2 மாதங்களாக பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஊரடங்கு காரணமாக பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதை தொடர்ந்து கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டுக்கான புதிய வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைகள் தற்போது துவங்கியுள்ளது. அந்த வகையில் தமிழக அரசின் நெசவுத் தொழில்நுட்ப பயிலகத்தில், 2021-22 ஆம் கல்வியாண்டில் டிப்ளமோ படிப்புகளுக்கான புதிய மாணவர் சேர்க்கை இணையதளம் வழியாக துவங்கியுள்ளது என தரமணி நெசவுத் தொழில்நுட்ப கழகம் அறிவித்துள்ளது.

இதில் விருப்பம் உள்ள மாணவர்கள் www.tngpt.com மற்றும் www.tngpt.in என்ற இணையதளத்தில் ஜூலை 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்புகளுக்கான கல்வி கட்டணமாக ரூ.2 ஆயிரம் மற்றும் 100% வேலைவாய்ப்புடன் அரசு உதவித்தொகை வழங்கப்படும் என நெசவுத் தொழில்நுட்ப பயிலகம் அறிவித்துள்ளது. அதனால் விருப்பமுள்ள மாணவர்கள் ஜூலை 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment