ஆன்லைன் வகுப்பால் மனச்சோர்வு ஏற்பட்டு தலைமுடியை சாப்பிட்ட பள்ளி மாணவி: வயிற்றிலிருந்து 1 கிலோ எடை கொண்ட கட்டி அகற்றம் - Daily Dhuniya

Breaking

Sunday, June 27, 2021

ஆன்லைன் வகுப்பால் மனச்சோர்வு ஏற்பட்டு தலைமுடியை சாப்பிட்ட பள்ளி மாணவி: வயிற்றிலிருந்து 1 கிலோ எடை கொண்ட கட்டி அகற்றம்

ஆன்லைன் வகுப்பால் மனச்சோர்வு ஏற்பட்டு தலைமுடியை சாப்பிட்ட விழுப்புரம் பள்ளி மாணவி: வயிற்றிலிருந்து 1 கிலோ எடை கொண்ட கட்டி அகற்றம்
விழுப்புரம் விழுப்புரத்தில் வசிக்கும் 15 வயது பள்ளி மாணவி ஒருவர் கடந்த ஒராண்டுக்கு மேலாக ஆன்லைன் வகுப்பு மூலம் கல்வி பயிற்று வருகிறார்.
அவரது பெற்றோர் பணிக்கு சென்றுவிடுவதால் அவருக்கு துணையாக வீட்டில் பாட்டி உள்ளார். அந்த மாணவிக்கு திடீரென வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனையில் அவருக்கு வயிற்றில் கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவர் ராஜமகேந்திரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கடந்த வாரம் அறுவை சிகிச்சை செய்தனர். மாணவியின் வயிற்றிலிருந்து சுமார் ஒரு கிலோ எடையுள்ள முடிகளால் ஆன கட்டியை அகற்றியுள்ளனர்.
https://youtu.be/VMa92kj3Sxg

No comments:

Post a Comment