போலீசை பார்த்ததும் ஆசிரியருக்கு திடீர் நெஞ்சுவலி - Daily Dhuniya

Breaking

Wednesday, July 20, 2022

போலீசை பார்த்ததும் ஆசிரியருக்கு திடீர் நெஞ்சுவலி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பள்ளி மாணவன் பிளேடால் கையை கிழித்து தற்கொலைக்கு முயன்ற புகாரில், போலீசார் ஆசிரியரை கைது செய்ய முயன்ற போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் பரபரப்பு நில்வியது.

தாராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலை பள்ளியில், திருப்பூரைச் சேர்ந்த 14 வயது மாணவன் விடுதியில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர் பிரகாசம் ஜெயக்குமார், வகுப்பறையில் வைத்து மாணவர்கள் முன்னிலையில் அந்த மாணவனின் தாயாரை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க | TNPSC - இணைய வழி விண்ணப்பங்களில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தினை சமர்ப்பித்த பிறகு மாற்றங்கள் செய்வதற்கு கூடுதல் அவகாசம் வழங்குவது தொடர்பான செய்தி வெளியீடு - 20/07/2022

இதனால்,மன உளைச்சலில் இருந்த மாணவன், பிளேடால் கையை கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்த புகாரின் பேரில், ஆசிரியரை கைது செய்ய போலீசார் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு திடீரென மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேலும், இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment