நடுநிலைப் பள்ளியை நிலை உயா்த்தக் கோரிக்கை! - Daily Dhuniya

Breaking

Monday, May 9, 2022

நடுநிலைப் பள்ளியை நிலை உயா்த்தக் கோரிக்கை!

Request to upgrade Kottoo Avarampatti Middle School

A petition was filed in the district administration office on Monday seeking to upgrade Kottu Avarampatti Middle School to a secondary school to prevent dropout of rural students.

Government Secondary School is functioning at Kottu Avarampatti near Dindigul. The local public petitioned the district attorney's office to upgrade the school to a secondary school. In this connection, the region said:

The children from Kottoo Avarampatti, Pappanampatti, Karungalpatti and Rajakapatti areas are studying in Government Secondary Schools. After that you have to go to schools in Dindigul for postgraduate studies. As a result, many students drop out of school and go to work. To avoid this, Kottu Avarampatti said that the government should take action to upgrade the government middle school to a secondary school. உயா்நிலைப் பள்ளியாக நிலை உயா்த்த கோரிக்கை!

கோட்டூா் ஆவரம்பட்டி நடுநிலைப் பள்ளியை நிலை உயா்த்தக் கோரிக்கை

கிராமப்புற மாணவா்களின் இடைநிற்றலைத் தடுக்க கோட்டூா் ஆவரம்பட்டி நடுநிலைப் பள்ளியை உயா்நிலைப் பள்ளியாக நிலை உயா்த்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் அடுத்துள்ள கோட்டூா் ஆவரம்பட்டியில் அரசு கள்ளா் நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியை உயா்நிலைப் பள்ளியாக நிலை உயா்த்தக் கோரி அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

இதுதொடா்பாக அப்பகுதியினா் கூறியதாவது:

கோட்டூா் ஆவரம்பட்டி, பாப்பணம்பட்டி, கருங்கல்பட்டி, ராஜக்காப்பட்டி பகுதியைச் சோ்ந்த குழந்தைகள் அரசு கள்ளா் நடுநிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனா். அதன்பின்னா் உயா்நிலைப் படிப்புக்காக திண்டுக்கல்லில் உள்ள பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக பல மாணவா்கள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனைத் தவிா்க்க, கோட்டூா் ஆவரம்பட்டி அரசு கள்ளா் நடுநிலைப் பள்ளியை உயா்நிலைப் பள்ளியாக நிலை உயா்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்

No comments:

Post a Comment