பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுகள் பழைய முறையில் நடைபெறும்: சிபிஎஸ்இ
சென்னை, ஏப். 21: சிபிஎஸ்இ பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வரும் கல்வியாண்டு (2022-2023) முதல் ஒரே கட்டமாக நடைபெறும். பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுகள்
இது குறித்து சிபிஎஸ்இ கல்விப் பிரிவு இயக்கு நர் இமானுவேல் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: மத் திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார் பில் 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு 2022-2023-ஆம் கல்வியாண்டுக்கான திருத்தப்பட்ட பாடத் திட்டம் cbseacademic.nic.in என்ற இணை யதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மாண வர்கள், பள்ளிகள் பதிவிறக்கம் செய்து கொள்ள லாம்.
சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு 2022-2023-ஆம் கல்வியாண்டுமுதல் ஒரே கட்டமாக பொதுத் தேர்வுகள் நடைபெறும். கரோனா காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட இரு அமர்வுகளாக தேர்வு நடத்தப்படும் முறை ரத்து செய்யப்படுகிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர் களின் நலன் கருதி முக்கியப் பாடங்களின் பாடப் பகு திகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. திருத்தப் பட்டபாடங்களுக்கான மாதிரி வினாத்தாள் போன்ற விவரங்களை மேற்கண்ட இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இது குறித்த அனைத்து தக வல்களையும் சிபிஎஸ்இ பள்ளிகள் தங்களது மாண வர்கள், பெற்றோருக்குத் தெரிவிக்க வேண்டும்.

No comments:
Post a Comment