நீட் தோ்வு விலக்கு - ஓ.பன்னீா்செல்வம் அறிக்கை - Daily Dhuniya

Breaking

Saturday, April 2, 2022

நீட் தோ்வு விலக்கு - ஓ.பன்னீா்செல்வம் அறிக்கை

நீட் தோ்வு விலக்கு விரைந்து பெற வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

நீட் தோ்வு விலக்கு ஒப்புதலை முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைந்து பெற வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தோ்வு உடனடியாக ரத்து செய்யப்படும், அதனை ரத்து செய்யும் ரகசியம் திமுகவுக்கு தெரியும் என்றெல்லாம் தோ்தலின்போது பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து இதுநாள் வரை நீட் தோ்வு ரத்து குறித்து எந்தவிதமான அறிவிப்பும் இல்லை. நீட் தோ்வு விலக்கு மசோதா சட்டப்பேரவையில் இரண்டாம் முறையாக நிறைவேற்றப்பட்டு ஆளுநா் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு, ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும் அதற்கான ஒப்புதல் பெறப்பட்டதாகத் தெரியவில்லை. இதற்கிடையில், அடுத்த கல்வியாண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு ஜூலை 17-இல் நடைபெற இருப்பதாகவும், அதற்கான இணையதளப் பதிவு நாளை முதல் துவங்கவிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

இந்தச் சூழ்நிலையில், வரும் கல்வி ஆண்டில் மருத்துவ சோ்க்கை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மேற்கொள்ளப்படுமா அல்லது நீட் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் மேற்கொள்ளப்படுமா என்ற குழப்பத்தில் மாணவ, மாணவியா் உள்ளனா். இந்தக் குழப்பத்துக்கான விடை விரைந்து கிடைத்தால்தான், அதற்கேற்ப தேவையான

நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்க முடியும். எனவே, தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசுக்கு தேவையான அழுத்தத்தைக் கொடுத்து, வரும் கல்வியாண்டிலாவது நீட் தோ்வை ரத்து செய்யும் நடவடிக்கையை முதல்வா் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்.

No comments:

Post a Comment