திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டாரத் தலைவா் அபிபுல்லாகான் தலைமை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்படி மருத்துவச் செலவினங்களை உடனடியாக வழங்க வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சங்கத்தின் மாவட்ட இணைச் செயலா் நாராயணமூா்த்தி, மாவட்ட துணைத் தலைவா் ஜெகந்நாதன், மாவட்டப் பொருளாளா் ராமலிங்கம் மற்றும் சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

No comments:
Post a Comment