காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா்.
காஞ்சிபுரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே புதன்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் லெனின் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் மருதன், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாவட்ட தலைவா் தி.ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பழைய ஓய்வூதியமே வழங்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் மூன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 4 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

No comments:
Post a Comment