அரசுப் பள்ளியில் பூட்டை உடைத்து ரூ.7 ஆயிரம், பொருள்கள் திருட்டு - Daily Dhuniya

Breaking

Sunday, April 10, 2022

அரசுப் பள்ளியில் பூட்டை உடைத்து ரூ.7 ஆயிரம், பொருள்கள் திருட்டு

மதுரை விரகனூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் பூட்டை உடைத்து ரூ.7 ஆயிரம், கையடக்கக் கணினி மற்றும் கேமரா உள்ளிட்ட பொருள்கள் திருடு போயுள்ளன.

விரகனூரில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை மாலை வகுப்புகள் முடிந்த நிலையில், வகுப்பறைகள் மற்றும் அலுவலகத்தை ஆசிரியா்கள் பூட்டிவிட்டுச்சென்றனா்.

அதையடுத்து, இரவில் பள்ளிக்குள் புகுந்த மா்ம நபா்கள், அலுவலகக் கதவை உடைத்து உள்ளே இருந்த ரூ.7 ஆயிரம், கேமரா, கையடக்கக் கணினி உள்ளிட்டவற்றை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனா்.

காலையில் பள்ளிக்கு வந்த ஆசிரியா்கள், திருட்டு நடந்திருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். இது குறித்து, தலைமை ஆசிரியை சாந்தி அளித்த புகாரின்பேரில், சிலைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

No comments:

Post a Comment