தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் பதவிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் 21ம் தேதி தொடக்கம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு வருகிற 21ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா வெளியிட்ட அறிவிப்பு:
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழ்நாடு தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் பதவியில் காலியாக உள்ள 28 பதவிகளுக்கு கடந்த ஏப்ரல் 18ம் தேதியும் எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த எழுத்து தேர்வில் 390 பேர் பங்கேற்றனர்.
இதே போல தோட்டக்கலை அலுவலர் பதவியில் காலியாக உள்ள 169 பதவிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்ற எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த எழுத்து தேர்வில் 1540 பேரும் பங்கேற்றனர். இத்தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீடு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு 384 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான நேர்காணல் வருகிற 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறும். தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க பணிகள் வேளாண்மை அலுவலர் பதவியில் காலியாக உள்ள 445 பதவிக்கு கடந்த ஏப்ரல் 18ம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த எழுத்து தேர்வில் 12,222 பேர் பங்கேற்றனர். இதில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாக 721 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் வருகிற 27ம் தேதி முதல் 30ம் தேதி வரையும், ஜனவரி 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment