ரூ 50 கோடி மோசடி அரசு பள்ளி ஆசிரியை கைது - Daily Dhuniya

Breaking

Friday, December 3, 2021

ரூ 50 கோடி மோசடி அரசு பள்ளி ஆசிரியை கைது

வேலுார்:வேலுாரில், 50 கோடி ரூபாய் மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியையை போலீசார் கைது செய்தனர்.

வேலுார், கொணவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஸ்வரி, 55; அரசு பள்ளியில் கணித ஆசிரியை. இவரது கணவர் ஓய்வு பெற்ற எஸ்.ஐ., தர்மலிங்கம், 60. இருவரும் 2018ல் வேலுாரில் கார், லாரி, ரியல் எஸ்டேட் தொழில் துவங்கினர். இதில் முதலீடு செய்தால் அதிக வட்டி கொடுப்பதாக கூறினர். சக ஆசிரியைகள் ஜான்சிராணி 2.50 கோடி, மலர் 45 லட்சம், தமிழ்செல்வி, 2.50 கோடி ரூபாய் கொடுத்துள்ளனர். இதேபோல தமிழகம் முழுதும் ஆசிரியர்கள், பொதுமக்கள் பல கோடி ரூபாய் முதலீடு செய்தனர்.பல மாதங்களாகியும் வட்டி தரவில்லை. கொடுத்த பணத்தை கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோர், வேலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.

விசாரணையில், மகேஸ்வரி, தர்மலிங்கம் தம்பதி 50 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததும், அப்பணத்தில் அவர்களது மகள்களான கீர்த்தனா, பூபானா ஆகியோர் பெயர்களில் சொத்துக்கள் வாங்கியதும் தெரிந்தது.வேலுாரில் பதுங்கியிருந்த மகேஸ்வரியை போலீசார் நேற்று கைது செய்து, தலைமறைவான தர்மலிங்கத்தை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment