ஒமைக்ரானை 2 மணிநேரத்தில் கண்டறியும் புதிய கருவி: ஐசிஎம்ஆர் கண்டுபிடிப்பு - Daily Dhuniya

Breaking

Sunday, December 12, 2021

ஒமைக்ரானை 2 மணிநேரத்தில் கண்டறியும் புதிய கருவி: ஐசிஎம்ஆர் கண்டுபிடிப்பு

ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருக்கிறதா?, இல்லையா? என்பதை 2 மணி நேரத்தில் கண்டறியும் பரிசோதனைக் கருவியை ஐஎம்ஆர் ஆய்வாளர்கள் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

ஐசிஎம்ஆர் அறிவியல் வல்லுநர் டாக்டர் பிஸ்வஜோதி போர்காகோட்டி தெரிவித்ததாவது: ஐசிஎம்ஆர் மற்றும் திப்ருகார்கில் உள்ள ஆர்எம்ஆர்சி இணைந்து, ஆர்சிபிசிஆர் கருவியுடன் இணைந்த புதிய பரிசோதனைக் கருவியைக் கண்டறிந்துள்ளோம். இதன் மூலம் ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை 2 மணிநேரத்தில் தெரிந்துவிடும்.

ஆனால், வழக்கமாக மரபணு பரிசோதனை மூலம் கண்டறிய வேண்டும் என்றால், குறைந்தபட்சம் 36 மணிநேரம் தேவைப்படும். சில நேரங்களில் 4 முதல் 5 நாட்கள் வரை கூட ஆகலாம். ஆனால், இந்த பரிசோதனை கருவி மூலம் 2 மணிநேரத்தில் ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறதா? என்பது தெரிந்துவிடும் கோல்கட்டாவை சேர்ந்த மருந்து நிறுவனமான ஜிசிசி பயோடெக், இந்த கருவியை அரசு மற்றும் தனியார் பங்களிப்பு திட்டம் மூலம் தயாரித்து வருகிறது. ஒரு உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் கொரோனா வைரஸின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸின் ஸ்பைக் புரதம் இருக்கிறதா? என்பது இந்தக் கருவியில் தெரியவரும். இதன் முடிவுகள் 100 சதவீதம் சரியாக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment